சர்க்கஸ் கலைஞர்கள்

ஒரு முறை எங்கள் பள்ளியின் எதிர்புறம் சர்க்கஸ் கூடாரம் 
அமைத்திருந்தனர். அதைப் பார்த்த என் தங்கைகள் அதை பார்க்க போக 
வேண்டும் என்று அடம் பிடிச்சு ஒரு நாள் நாங்க போனோம். பல முறை 
நான் இது போல சர்க்கஸுக்கு போயிருக்கிறேன். ஆனால் இந்த முறை 
எதோ என் மனதில் வேதனை கொடுத்தது. காரணம் நான் என்னுடைய சுய 
அறிவை உபயோக படுத்தும் அளவிற்கு வளந்திருந்தேன் இம்முறை. அந்த 
சர்க்கஸில் சாகசம் புரித பல குழந்தைகளும் பெரியவர்களும் என் மனதை 
அரித்தனர். அவர்களது அவல நிலை நினைத்து எனக்கு ரெண்டு மூணு 
நாள் சரியாய் தூக்கமே வரல. ஆனாலும் ஒரு பத்தாம் வகுப்பு படிக்கும் 
பெண்ணால் என்ன செய்ய முடியும் அப்படின்னு விட்டுட்டேன். அப்படி 
வருத்தத்தில் இருக்கும் பொது எழுதின கவிதை தான் இவை:

ஒரு சாண்
வயிற்றிற்காக
மரணத்தை 
ஒவ்வொரு கணமும் 
எதிர்நோக்கி வாழும் 
கலைக்கூத்தாடிகள்!
-----------------------------------------------------------------------
பள்ளி செல்லும் வயதில் 
சென்று கொண்டு இருக்கிறான் 
சர்க்கஸில் 
சாகசங்கள் புரிய!
-----------------------------------------------------------------------

உயிரை 
துச்சமாக எண்ணி 
அந்தரத்தில் தொங்கியும் 
ஆகாசத்தில் பரந்தும் 
விண்ணுக்கும் மண்ணுக்கும் 
இடைப்பட்ட வெளியில் 
மரணத்தை ஒவ்வொரு நொடியும் எதிர்நோக்கி 
செய்யும் சாகசங்கள் 
அனைத்திற்கும் காரணம் 
அந்த ஒரு சாண் வயிற்ருக்காக 
உணவு உண்டு வாழ்வதற்காக மட்டுமே!
Advertisements

வெற்றி


வாழ்க்கை 
நாணயம் போல
வெற்றியும் தோல்வியும் நிச்சயம் 
ஆனால் 
பெண் என்பவள் 
வெற்றியின் சின்னம் 
தோல்வியை கண்டு மிரண்டிருந்தால் 
தெரசா 
அன்னை தெரசாவாக மாறியிருக்க முடியாது 
கல்பனா சாவ்லா 
விண்வெளிக்கும் சென்றிருக்க முடியாது 
பெண்ணே!
விழித்துக் கொள் 
வீறுகொண்டு எழு 
இனி 
உன் பாதைகளில் 
வெற்றிப் பூக்கள் பூக்கட்டும்!!!

புதிர்


விடிகாலையிலயே எழுந்தேன் 
உன்னைப் பார்ப்பதற்காக 
இரவு நெடுநேரம் விழித்திருந்தேன் 
உன்னைப் பார்ப்பதற்காக 
ஆனால் நீயோ 
என் கனவிலும் கூட என்னை பார்க்க மறுத்தாய்!!!

பெண்


தாய் சொன்னாள்
பெண் அடக்கத்தின் உருவம் என 
சகோதிரி சொன்னாள்
பெண் பொறுமையின் சிகரம் என 
தோழி சொன்னாள் 
பெண் அன்பும் பாசமும் நிறைந்தவள் என
ஆனால் 
சில ஆண்கள் சொல்கிறார்கள் 
பெண் பணம் கொழிக்கும் மரம் என!!!

மகிழ்ச்சி

நான் எனது பள்ளி பருவத்தில் இருந்தே ஒரு பெரிய கவிதாயினி ( யாரு 
அதுன்னு நீங்க கேக்குறது என் காதுல விளுது). அந்த காலத்தில நான் 
எழுதின மனிக்கவும் கிறுக்கின ஒரு சில கவிதைகளை இந்த பதிவிலும் 
தொடர்ந்து வரும் பதிவுகளிலும் போடுகிறேன். பார்த்து படித்து மகிழுங்கள் 
தோழர்களே (அய்யயோ நாங்க உயிரோட இருக்கறது உனக்கு 
பிடிக்கலையான்னு நீங்க கதருறதும் எனக்கு கேக்குது ஆனாலும் விட 
மாட்டேன் நீங்க படிச்சு தான் ஆகனும்)

நான் 
மின்னும் நட்சத்திரங்களில் பார்த்தேன் 
அடிக்கும் அலைகளில் பார்த்தேன் 
ஆடும் மயிலில் பார்த்தேன் 
தாவும் முயலில் பார்த்தேன் 
சிரிக்கும் மழலையில் பார்த்தேன் 
விரியும் பூக்களில் பார்த்தேன் 
ஓடும் நதியில் பார்த்தேன் 
கொட்டும் மழையில் பார்த்தேன் 
சுட்டெரிக்கும் வெய்யிலில் பார்த்தேன் 
என் மனதில் எழும் மகிழ்ச்சி என்னும் சங்கீதத்தை!!!

தெய்வம்

ஏக்கங்கள்லவாறாய் 
என் வாழ்வின் 
பெரும் பகுதியை ஆட்கொண்டிருந்தது
 
பள்ளிக்கு அழைத்து வரும் 
தந்தையை பார்த்து...

சுற்றுலா கூட்டி செல்லும் 
தந்தையை பார்த்து...

விளையாட சொல்லி தரும் 
தந்தையை பார்த்து...

மதிகெட்ட ஆண்களிடம் இருந்து 
தன் பிள்ளையை பாதுகாக்கும் 
தந்தையை பார்த்து...

துன்பத்தின் பொது 
தோல் கொடுத்து ஆறுதல் கூறும் 
தந்தையை பார்த்து...

வெற்றி பெற்ற பிள்ளையை 
அனைத்து முத்தமிடும் 
தந்தையை பார்த்து...

திருமணம் முடித்து 
கண்கலங்கி 
வாழ்த்தி வழியனுப்பும் 
தந்தையை பார்த்து...

பேரக் குழந்தைகளை 
கொஞ்சி விளையாடும் 
தந்தையை பார்த்து...

நானும் கற்பனை செய்து கொள்வேன் 
என் தந்தையும் இவர்களை போல் 
தான் இருந்திருப்பார் என்று...

ஆனால் இன்று உணர்கிறேன் 
இவர்களை விடவும் 
மேலானவர் என் தந்தை...

ஏனெனில்
இவர்கள் இழக்காத ஒன்றை
எனக்காக இழந்திருக்கிறார் 
"தன் உயிரை"
என் தந்தையும் 
ஒரு தெய்வமே!!!

அப்பா

சிறு வயதில் 
பள்ளி செல்கையில் 
நான் நினைத்ததுண்டு...

யார் இவர்கள்? 
அனைத்து மாணவர்களையும் 
பள்ளியில் விட்டு போவதும் 
கூட்டி செல்வதுமாய்...

தோழிகளை வினவினேன் 
யார் இவர்?
"அவர் என் அப்பா"
அப்படியென்றால்?
சட்டென கேட்டேன் 
காரணம் புரியாமல்...

பதில் தெரியாமல் விழித்தனர்...

நானே யூகித்து கொண்டேன்
இவர்களுக்கு "அம்மா" இல்லை போல 
அதனால் தான் வேறு எவரோ 
இவர்களை பார்த்துக் கொள்கிறார்கள் என்று!!!