ஒரு முறை எங்கள் பள்ளியின் எதிர்புறம் சர்க்கஸ் கூடாரம் அமைத்திருந்தனர். அதைப் பார்த்த என் தங்கைகள் அதை பார்க்க போக வேண்டும் என்று அடம் பிடிச்சு ஒரு நாள் நாங்க போனோம். பல முறை நான் இது போல சர்க்கஸுக்கு போயிருக்கிறேன். ஆனால் இந்த முறை எதோ என் மனதில் வேதனை கொடுத்தது. காரணம் நான் என்னுடைய சுய அறிவை உபயோக படுத்தும் அளவிற்கு வளந்திருந்தேன் இம்முறை. அந்த சர்க்கஸில் சாகசம் புரித பல குழந்தைகளும் பெரியவர்களும் என் மனதை அரித்தனர். அவர்களது அவல நிலை நினைத்து எனக்கு ரெண்டு மூணு நாள் சரியாய் தூக்கமே வரல. ஆனாலும் ஒரு பத்தாம் வகுப்பு படிக்கும் பெண்ணால் என்ன செய்ய முடியும் அப்படின்னு விட்டுட்டேன். அப்படி வருத்தத்தில் இருக்கும் பொது எழுதின கவிதை தான் இவை:ஒரு சாண் வயிற்றிற்காக மரணத்தை ஒவ்வொரு கணமும் எதிர்நோக்கி வாழும் கலைக்கூத்தாடிகள்! ----------------------------------------------------------------------- பள்ளி செல்லும் வயதில் சென்று கொண்டு இருக்கிறான் சர்க்கஸில் சாகசங்கள் புரிய! -----------------------------------------------------------------------
உயிரை துச்சமாக எண்ணி அந்தரத்தில் தொங்கியும் ஆகாசத்தில் பரந்தும் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடைப்பட்ட வெளியில் மரணத்தை ஒவ்வொரு நொடியும் எதிர்நோக்கி செய்யும் சாகசங்கள் அனைத்திற்கும் காரணம் அந்த ஒரு சாண் வயிற்ருக்காக உணவு உண்டு வாழ்வதற்காக மட்டுமே!
வெற்றி
வாழ்க்கை நாணயம் போல வெற்றியும் தோல்வியும் நிச்சயம் ஆனால் பெண் என்பவள் வெற்றியின் சின்னம் தோல்வியை கண்டு மிரண்டிருந்தால் தெரசா அன்னை தெரசாவாக மாறியிருக்க முடியாது கல்பனா சாவ்லா விண்வெளிக்கும் சென்றிருக்க முடியாது பெண்ணே! விழித்துக் கொள் வீறுகொண்டு எழு இனி உன் பாதைகளில் வெற்றிப் பூக்கள் பூக்கட்டும்!!!
புதிர்
பெண்
மகிழ்ச்சி
நான் எனது பள்ளி பருவத்தில் இருந்தே ஒரு பெரிய கவிதாயினி ( யாரு அதுன்னு நீங்க கேக்குறது என் காதுல விளுது). அந்த காலத்தில நான் எழுதின மனிக்கவும் கிறுக்கின ஒரு சில கவிதைகளை இந்த பதிவிலும் தொடர்ந்து வரும் பதிவுகளிலும் போடுகிறேன். பார்த்து படித்து மகிழுங்கள் தோழர்களே (அய்யயோ நாங்க உயிரோட இருக்கறது உனக்கு பிடிக்கலையான்னு நீங்க கதருறதும் எனக்கு கேக்குது ஆனாலும் விட மாட்டேன் நீங்க படிச்சு தான் ஆகனும்)நான் மின்னும் நட்சத்திரங்களில் பார்த்தேன் அடிக்கும் அலைகளில் பார்த்தேன் ஆடும் மயிலில் பார்த்தேன் தாவும் முயலில் பார்த்தேன் சிரிக்கும் மழலையில் பார்த்தேன் விரியும் பூக்களில் பார்த்தேன் ஓடும் நதியில் பார்த்தேன் கொட்டும் மழையில் பார்த்தேன் சுட்டெரிக்கும் வெய்யிலில் பார்த்தேன் என் மனதில் எழும் மகிழ்ச்சி என்னும் சங்கீதத்தை!!!
தெய்வம்
ஏக்கங்கள் பலவாறாய் என் வாழ்வின் பெரும் பகுதியை ஆட்கொண்டிருந்தது பள்ளிக்கு அழைத்து வரும் தந்தையை பார்த்து... சுற்றுலா கூட்டி செல்லும் தந்தையை பார்த்து... விளையாட சொல்லி தரும் தந்தையை பார்த்து...மதிகெட்ட ஆண்களிடம் இருந்து தன் பிள்ளையை பாதுகாக்கும் தந்தையை பார்த்து... துன்பத்தின் பொது தோல் கொடுத்து ஆறுதல் கூறும் தந்தையை பார்த்து... வெற்றி பெற்ற பிள்ளையை அனைத்து முத்தமிடும் தந்தையை பார்த்து...
திருமணம் முடித்து கண்கலங்கி வாழ்த்தி வழியனுப்பும் தந்தையை பார்த்து... பேரக் குழந்தைகளை கொஞ்சி விளையாடும் தந்தையை பார்த்து... நானும் கற்பனை செய்து கொள்வேன் என் தந்தையும் இவர்களை போல் தான் இருந்திருப்பார் என்று... ஆனால் இன்று உணர்கிறேன் இவர்களை விடவும் மேலானவர் என் தந்தை...
ஏனெனில் இவர்கள் இழக்காத ஒன்றை எனக்காக இழந்திருக்கிறார் "தன் உயிரை" என் தந்தையும் ஒரு தெய்வமே!!!
அப்பா
சிறு வயதில் பள்ளி செல்கையில் நான் நினைத்ததுண்டு... யார் இவர்கள்? அனைத்து மாணவர்களையும் பள்ளியில் விட்டு போவதும் கூட்டி செல்வதுமாய்...தோழிகளை வினவினேன் யார் இவர்? "அவர் என் அப்பா" அப்படியென்றால்? சட்டென கேட்டேன் காரணம் புரியாமல்... பதில் தெரியாமல் விழித்தனர்...
நானே யூகித்து கொண்டேன் இவர்களுக்கு "அம்மா" இல்லை போல அதனால் தான் வேறு எவரோ இவர்களை பார்த்துக் கொள்கிறார்கள் என்று!!!
கடமை
இன்றைய தினம் என் வாழ்வின் ஆதாரமாய் வாழ்ந்த எனதுயிர் தந்தையின் நினைவு தினம் ! ஆம்! அவரது இறப்பு எனது வாழ்வின் தொடக்கத்திற்காக...அவரது உயிர் எனது ஆன்மாவை உயிர் பெற செய்யவே... கடவுள் எனக்களித்த மிக பெரிய சாபம்! தவறுகள் ஏதேனும் நான் செய்திடின் என்னை உயிர் பெற செய்யமால் இருந்திருக்கலாம்... ஆனால் எனது தவறுகளுக்காக என் தந்தையின் உயிர் எடுப்பது எவ்விதத்தில் நியாயம்?
எங்கு போய் தீர்ப்பேன் என்னை பெற்ற கடனை தாய்க்கும் தன் உயிர் அழித்து என்னை உயிர் பெற செய்த தந்தைக்கும்... ஒரு வேளை நானும் இறக்க நேரிடுமோ பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து முடிக்காத கடனாளியை...
சாபம்
நான் இவ்வுலகில் தோன்ற கடவுள் இழைத்த அநீதி என் தந்தையின் இழப்பு... ஓர் உயிர் பிறக்க மறு உயிர் இறக்க என்பது தான் கடவுளின் நீதியோ... யாரை சோதிக்க இப்படி ஓர் பெருந்துயர்?தந்தையை இழந்து தாயும் சேயும் வாழும் அவலத்தை கண்டு இன்புறவோ? அல்லது பற்பல கனவுகளும் காவியங்களும் தன் மகளுக்காய் படைத்த தந்தையின் மனக்கோட்டை சிதைவுன்டத்தை எண்ணிக் களித்திடவோ?
எதற்காக இழைத்தாய் இப்பெரும் அநீதியை? வருடங்கள் ஏழு காத்திருந்து சொல்லவொண்ணா பரிகாரங்களையும் பூஜைகளையும் உனக்காய் செய்து பிள்ளை வரம் கேட்டு மன்றாடிய எனது பெற்றோரை ஒரு புறம் மகிழ்வித்து மறு புறம் வேதனைக்குல்லாக்கினயே.... இதுவா கடவுளின் செய்கை?
எனக்காய் உயிர்விட்ட எனது தந்தையை எண்ணி நித்தம் வருந்தும் சாபத்தை என்னக்கேன் அளித்தாய்? கணவரின்றி என் தாய் அனுபவித்த பல இன்னல்களும் எதற்காக? ஒரு உயிரை கொடுத்து மறு உயிரை பறிக்கும் உன் சித்து விளையாட்டை எங்களோடு நிறுத்திக்கொள்...
இல்லையெனில் நீயும் ஒரு நாள் சபிக்கப்படுவாய்!!!
…கனவு
நேற்று பார்த்தேன் இன்றைய கனவில் நீ! என்ன ஒரு சிக்கலான மனித மனம்... பல ஆண்டுகள் உயிரை கொடுத்து காக்கும் பெற்றோரையும் பல உணர்வுகளை பகிர்ந்து கொண்ட உடன் பிறந்தவர்களையும் பல நூறு சண்டைகளுக்கு பிறகும் நம்மை வெறுக்காமல் அரவணைக்கும் நண்பர்களையும் நன் கண்டதில்லை கனவில் அதுவும் உன்னை போல் பார்த்த அடுத்த நாளே இதற்க்கு என்ன காரணமாய் இருக்ககூடும் உனது தோற்றமா உனது பெரிய கண்களா அல்லது உனது விசித்திரமான சிரிப்பா... என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்ஆனால் ஒன்று... உன்னை என் கனவில் பார்த்த மறு கணமே அதிர்ந்து போய் அலறினேன் அய்யயோ சந்திரமுகி !!!

















